உரம் இடும் பணியில் விவசாயி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கரூரில் சிஐடியூ சாலை மறியல்

கரூர், ஜன. 7: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 15பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் கரூர் மாவட்ட சிஐடியூ சார்பில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று காலை மாவட்ட நிர்வாகி முருகேசன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 15பேரை டவுன் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

Related Stories:

>