×

பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைப்பு: ராமதாஸ் அறிவிப்பு

 

திண்டிவனம்: திண்டிவனத்தில் இன்று பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும், நாளை இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் குறித்து இக்கூட்டத்தின்போது ஆலோசனை நடத்த ராமதாஸ் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது கனமழை காரணமாக இந்த கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக பாமக தலைமை நிலையம் நேற்று அறிவித்துள்ளது. ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : PMK ,Ramadoss ,Tindivanam ,Vanniyar Sangam ,Youth Association ,Perur ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...