பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் புள்ளம்பாடி மகளிர் ஐடிஐயில் சேர்க்கை ஆரம்பம்

திருச்சி, ஜன.7: லால்குடி தாலுகா புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2020ம் ஆண்டிற்கான நேரடிச் சேர்க்கை வரும் 16ம்தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் நேரில் இந்நிலையத்திற்கு வந்து இலவசமாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என புள்ளம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கற்பகம் தெரிவித்துள்ளார். கம்மியர், டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்), ஆடை தயாரித்தல், பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள், அலங்காரப் பூத்தைத்தல் தொழில்நுட்பம், இயந்திர வேலையாள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு 9443277592 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>