லால்குடி அருகே செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

லால்குடி, டிச.7:  லால்குடி அருகே தாளக்குடி பகுதியை சேர்ந்த சற்று மனநலம் குறைபாடு உடைய 12 வயது சிறுமியை, கடந்த 1ம் தேதி தாளக்குடி பஜனை மடம் தெருவை சேர்ந்த அசோக்குமார் (38) என்பவர், அவரது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையறிந்த அவரது பெற்றோர் லால்குடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அசோக்குமார் நேற்று திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லால்குடி மகளிர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More