×

வசந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஓமலூர், நவ. 18: ஓமலூர் கோட்டையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுசாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கார்த்திகை சோமாவார சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், நந்தியம் பெருமானுக்கும், வசந்தீஸ்வரருக்கும் பால், தயிர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, பழ ரசங்கள் என 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பலவகை மலர்களால் அலங்காரம் செய்து, மாக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மை அப்பனை தேரில் அமர்த்தி கோயிலை சுற்றி வந்து வழிபாடு செய்யப்பட்டது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Vasantheeswarar temple ,Omalur ,Sametha ,Vasantheeswarar ,Omalur Fort ,Karthigai Somavara ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்