- பிரபாகரன்
- வேலூர் மாவட்டம்
- வேலூர்
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- kudiyatham
- திட்டம்
- தாசில்தார் கோடீஸ்வரன்
- வேலூர் மாவட்ட நில அளவை அலுவலகம்
- ரமேஷ்
- வேலூர்...
வேலூர், நவ.18: வேலூர் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோடீஸ்வரன், வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை ஆய்வு குழு அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ரமேஷ், வேலூர் தனித்துணை கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் (முத்திரை கட்டணம்), வேலூர் கிடங்கு மேலாளராக (டாஸ்மாக்) பணியாற்றிய செல்வி, வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி தாசில்தாராகவும் (நில எடுப்பு), அங்கு பணியாற்றிய ஹெலன்ராணி குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
