கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கல்பகா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சேகர்(46). எம்.ஏ.நகர் ஜி.என்.டி சாலையில் டயர் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு சாப்பிட அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். கடையின் ஷட்டரை மூடாமல் அலுமினிய கதவை மட்டும் பூட்டிவிட்டி சென்றுள்ளார். பின்பு மாலை 3 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் கல்லாவில் வைத்திருந்த ரூ.59 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார், வழக்கு பதிவுசெய்து கொள்ளையனை தேடுகின்றனர்.

Related Stories:

>