×

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதில் அதிமுகவினர் இடையே போட்டா போட்டி: பொதுமக்கள் அதிருப்தி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைப்பதில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி இடையில் போட்டா போட்டியால், கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதி அடைவதாக கூட்டுறவு அதிகாரிகள் புலம்புகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ₹2,500 மற்றும் தொகுப்பு வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. திருத்தணி சட்டமன்ற தொகுதி பொறுத்தவரை அதிமுக எம்.எல்.ஏ நரசிம்மன், முன்னாள் எம்பி கோ.அரி ஆகியோர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேலையில் எம்எல்ஏ சீட் பெற இருவரும் கடுமையாக மோதுகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை அதிமுகவினர் கட்சி நிகழ்ச்சியாக மாற்றினர். குறிப்பாக, எம்எல்ஏ, முன்னாள் எம்பி நேரடியாக கூட்டுறவு அதிகாரிகள், தலைவர்களுக்கு போன் செய்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். ஒரே நேரத்தில் இருவரும் உத்தரவிடுவதால் அதிகாரிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் புலம்பினர். நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருவரும் போட்டா போட்டியால் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் ஒரே நிகழ்ச்சியை இருமுறை நடத்த வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டதால் அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் புலம்பும் நிலையக்கு தள்ளப்பட்டு பொங்கள் தொகுப்பை வாங்க காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் உத்தரவிடுவதால் அதிகாரிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் புலம்பினர்.இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பல மணி நேரம் காத்திருந்தனர்.  

Tags : leaders ,AIADMK ,
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...