போக்சோவில் ஐடி ஊழியர் கைது

ஆலந்தூர்: திருவண்ணாமலையை சேர்ந்தவர் பூமிநாதன் (21). சோழிங்கநல்லூரில் தங்கி அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை  காதலித்து வந்துள்ளார். மேலும், திருமண ஆசைவார்த்தை கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்தி சென்று, கிருஷ்ணகிரியில் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, பூமிநாதன் மற்றும் சிறுமியை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், பூமிநாதனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பூமிநாதனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>