தஞ்சை சோழன் சிலை பூங்காவில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்

தஞ்சை, ஜன.6: தஞ்சை சோழன் சிலை பூங்காவில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சைபெரிய கோயில் அருகே சோழன் சிலை பூங்கா அமைந்துள்ளது. இங்கு மாமன்னன் ராஜராஜனின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. மேலும் புல்வெளிகளும், சிறுவர்கள் விளையாட விளையாட்டு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பூங்காவில் சமீப காலமாக கால்நடைகள் மேய்ச்சலுக்கு பயன்படும் இடமாக மாறியுள்ளது. இதனால் பூங்காவிற்குள் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மாமன்னன் ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவிக்க இப்பூங்காவிற்கு வருவது வழக்கம். ஆனால் இங்கு எந்நேரமும் மாடுகள் மேய்ந்து வருவதால் அவை முட்டிவிடும் என்ற அச்சத்தால் யாரும் பூங்கா உள்ளே செல்ல தயங்குகின்றனர். சிறுவர்களும் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே இப்பூங்காவில் நடமாடும் மாடுகளை கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு பூங்கா செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>