கலெக்டரிடம் புகார் மனு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்

ஒரத்தநாடு, ஜன.6: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் முன் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராம உதவியாளர் சங்க தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தம்பியய்யா விளக்க உரையாற்றினார். இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

Related Stories:

>