செட்டிக்குளம் வேளாண் வணிகவளாகத்தில் நடைபெறும் ஏலத்தில் வெங்காயம் விற்று பயனடையலாம்

பெரம்பலூர்,ஜன.6:செட்டிக்குளம் சின்ன வெங்காய வணிக வளாகத்தில் நடை பெறும் ஏலத்தில் விவசாயிகள் தங்களது வெங்காயத்தினை விற்று பயன்பெற லாம். என பெரம்பலூர்கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூ மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளத்தில் மலைக்கோவில் அரு கே, ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் வணிக வளாகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.114.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 27ம்தேதியன்று தமிழகஅரசால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வெங்காய வணிக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சின்ன வெங்காயத்திற்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில் இ துவரை 10,362 விவசாயிகள் தாங்கள் விளைவித்த 2250.12 மெட்ரிக்.டன் சின்ன வெங்காயத்தினை ஏலத்திற்கு கொண்டு வந்து உரிய விலைக்கு விற்று பயன டைந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.425.86 லட்சம் ஆகும்.

சமீப காலத்தில் வெங்காய விலையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தின் காரணமாக செ ட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்திற்கு ஏலத்திற்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து போனது. அதனால் ஏலம் தொடர்ந்து நடைபெறவில்லை. ஆனா ல் தற்பொழுது மீண்டும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை களில் ஏலம் நடைபெற்று வருகிறது.செட்டிகுளம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிக ளிலுள்ள வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சின்ன வெ ங்காயத்தினை செட்டிக்குளம் வெங்காய வணிக வளாகத்தில் நடைபெறும் ஏல த்திற்கு கொண்டு வந்து விற்று பயனடையலாம். மேலும் சின்ன வெங்காயத்தினை தாளில் இருந்து பிரித்து எடுப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் இடவசதி இல்லாத விவசாயிகள் வேளாண்மைஅலுவலர்,உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) ஆகியோரை 99423 81099 மற்றும் 7010628819ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு, செட்டிகுளம் சின்ன வெங்காய வணிக வளாகத்தினை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>