பார்வையாளர் பங்கேற்பு பாடாலூர் அருகே சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் போக்சோவில் கைது

பாடாலூர், ஜன.6: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் சின்னதுரை (24). இவர் 14 வயது சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணிற்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அந்த பெண் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது தந்தை பாடாலூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சின்னதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>