டிரைவர், உரிமையாளர் சிறுநீர் கழிக்க சென்ற போது கடத்தப்பட்ட கார் சாலையோரம் மீட்பு

பெரம்பலூர்,ஜன.6: பெரம்பலூர் அருகே சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சிறு நீர் கழிக்கச் சென்ற போது கடத்தப்பட்ட காரை சாலையோரம் மீட்டனர். பைக்கில் வந்து கடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகள் ராமமூர்த்தி (21). இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கங்காதரனிடம் கார் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். இந்த காருக்கான உரிமையாளர் பெயரை தனது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்காக நேற்று முன்தினம் (4ம்தேதி) இரவு புறப்பட்டு, 5ம்தேதி செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எப்சி காட்டுவதற்காக அந்தக் காரில் சென்றுள்ளார்.காரை அவரது நண்பரான ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த முத்து மகன் ரவி(40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இவர்கள் கார் பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது தண்ணீர் பந்தல் அடுத்து சாலையோரத்தில் காரைநிறுத்தி விட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவ ரில் ஒருவர் காரின் கதவை திறந்து அதிலிருந்த சாவியால் காரை ஸ்டார்ட் செய் து கிளம்பியுள்ளார். அவரோடு வந்த மற்றொரு பைக்கில் தப்பியோடி விட் டார். இது குறித்து கார் டிரை வர் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் காரை விர ட்டிச்சென்றனர். பிறகு கண்டுபிடிக்க முடியாமல், காலையில் டோல்பிளாசா சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு கண்டுபிடிக்கலாம் நினைத்து திரும்பிவந்தனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை அந்தக்கார் வாலிகண்டபுரம் அருகே சாலையோர ம் நின்று கொண்டிருந்தது. அதனை முந்தையநாள் இரவு அபேஸ்செய்த இருவரில் யாரும் அங்கே இல்லை. காரை மீட்டுவந்தப் போலீசார், டிரைவர் ரவி கொடுத்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்து காரை அபேஸ் செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>