×

விஏஓ பதவி உயர்வு பட்டியல் வெளியிடக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன. 6: கிராம நிர் வாக அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிடக்கோரி நாகை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஹமித் பாஷா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜ், திருமருகல் சரக பொறுப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகி த்தனர். மாவட்ட தலைவர் கலியபெருமாள் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை கைவிட்டு விட்டு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் பதவி உயர்வை 10 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்தியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. வட்ட செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,release ,Revenue Village Assistants ,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு