×

ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு 20 ஆண்டுகளில் 19,560 விமானங்கள் தேவை: ஏர் பஸ் நிறுவனம் கணிப்பு

பாங்காக்: தாய்லாந்து தலைவர் பாங்காங்கில் ஆசிய-பசிபிக் விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர்களின் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்பஸ் ஆசியா பசிபிக் தலைவர் ஆனந்த் ஸ்டான்லி பேசுகையில்,‘‘அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டு பயணிகள் வளர்ச்சியானது 4.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கணிப்பின்படி பிராந்தியத்திற்கு சுமார் 16100 குறுகிய உடல் ரக விமானங்கள் தேவைப்படும். 20 ஆண்டுகளில் 42520 புதிய விமானங்களுக்கான உலகளாவிய தேவையில் 46சதவீதத்தை ஏர்பஸ் நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இந்தியாவும், சீனாவும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்றார்.

Tags : Asia Pacific ,Air Bus ,Bangkok ,Thailand ,Asia-Pacific Airlines Association ,Airbus Asia Pacific ,President ,Anand Stanley ,Asia-Pacific region ,
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...