அமைச்சர் ஆய்வு திருக்காம்புலியூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

கரூர், ஜன. 6: கரூர் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி(52). இவர், நேற்று முன்தினம் மாலை வெளியூர் செல்வதற்காக திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் பாப்பாத்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.இந்த சம்பவம் குறித்து பாப்பாத்தி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நொய்யல் துணை மின்நிலைய பகுதிகள்: அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம், புதூர், வலையபாளையம், இந்திரா காலனி, வடக்கு நொய்யல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

Related Stories:

>