×

குளித்தலை தாலுகா பகுதியில் இலவச வேட்டி, சேலைகள் வழங்க பணிகள் தீவிரம்

குளித்தலை, ஜன.6: குளித்தலை வருவாய் வட்டத்திற்குட்பட்ட குளித்தலை,நங்கவரம், தோகைமலை ஆகிய வருவாய் கிராமத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கான இலவச வேட்டி, சேலை வழங்க குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு வேட்டி, சேலை வந்துள்ளது. அதனை ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வருவாய் ஆய்வாளர்கள் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டு குளித்தலை தாலுகாவில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : taluka area ,Kulithalai ,
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்