×

சபரிமலை தங்கம் திருட்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கத்தகடுகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க தங்கம் திருட்டு தொடர்பான ஆவணங்களை தரக்கோரி பத்தனம்திட்டா மாவட்டம் ராநி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து தங்கம் திருட்டு தொடர்பான ஆவணங்களை தரக்கோரி அமலாக்கத்துறை சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Sabarimala ,Enforcement Directorate ,Thiruvananthapuram ,Special Investigation Team ,SIT ,Kerala High Court ,Rani ,Pathanamthitta district ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...