×

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி, ஜன.6:தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆலோசனைப்படி தனசேகரன் நகரில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு மதிய உணவு மற்றும் அழகாபுரி அருள் அலங்காரம் பார்வையற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு மற்றும் வேஷ்டி, சேலை, போர்வை ஆகியவற்றை எஸ்.ஜே.ஜெகன் வழங்கினார்.

இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாலன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தர்மலிங்கம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூட்டாம்புளி அன்பு இல்லத்தினருக்கு காலை உணவினை ஒன்றிய செயலாளர்  ஜெயக்கொடி வழங்கினார்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன்,  மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன்,  ராஜ்குமார், தெற்குமாவட்ட வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் ரகுராமன், கலை  இலக்கிய பகுத்தறிவு ஒன்றிய அமைப்பாளர் ராஜாஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர்  பாலசுந்தரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாராயணன், வர்த்தக அணி துணை  அமைப்பாளர் செல்வின் ஜெபக்குமார், கிளை செயலாளர்கள் இசக்கிமுத்து, முருகன்,  தனராஜ், ஆத்தியப்பன், அன்பு, ஒன்றிய வர்த்தக அணி பொன்செல்வம், ஜமால்,  ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Kanimozhi ,Birthday Celebration ,Thoothukudi ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...