பாளை கல்லூரியில் சாரதா தேவி ஜெயந்தி விழா

நெல்லை, ஜன. 6: பாளை. சாரதா பெண்கள் கல்வி நிறுவனம் சார்பில் அன்னை சாரதா தேவியின் 168வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா தபோவனத்தை சேர்ந்த சுவாமி அபேதானந்த மகராஜ் முன்னிலையில் அன்னையின் ரத ஊர்வலம் நடந்தது. கல்லூரி முதல்வர் மலர்விழி வரவேற்றார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபிரியா அம்பா, கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்கா பிரியா அம்பா, மெட்ரிக். பள்ளி செயலர் யதீஸ்வரி தவபிரியா அம்பா ஆகியோர் அருளுரை வழங்கினர். ராமகிருஷ்ணா தபோவன செயலர் சுவாமி சத்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து அன்னையின் பாடல் பாடப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ‘பிறப்பினும் உயர்ந்தது பண்பு’ என்ற தலைப்பில் ஆசிரியைகள் நாடகம் நடத்தினர். உதவி பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories:

>