×

நயினார்குளம் சாலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்

நெல்லை, ஜன. 6: நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சந்திப்பு பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம் புதுப்பிப்பு, புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் கட்டுமான பணி, மாநகராட்சி பொருட்காட்சி திடலில் வணிக வளாகம், நேரு சிறுவர் பூங்கா சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நயினார்குளம் கரையும் மேம்படுத்தப்படுகிறது, முதற்கட்டமாக 1.5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் ரூ.14.68 கோடி மதிப்பில் நடக்கிறது. நயினார்குளம் கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்புச்சுவர், நடுவில் அழகிய நடைபாதைகளும் அமைக்கப்படுகின்றன. இந்த நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நயினார்குளம் கரைகளை சுத்தப்படுத்தி, கரையை ஒட்டிய பகுதியில் கான்கிரீட் சுவர் கட்டுமான பணிகள் நடக்கிறது. ஏற்கனவே இச்சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளும் மும்முரமாக நடந்து வருவதால், நயினார்குளம் சாலையில் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மாற்றுப்பாதையில் பயணிக்குமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : Nainarkulam Road ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ