×

இன்றும், நாளையும் சிறப்பு முகாம் ஓட்டல், விடுதி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


சேலம், ஜன.6: சேலம் மாநகரில் உள்ள உணவகங்கள், விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு  கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும்  உணவகங்கள், விடுதிகளின் உரிமையாளர்களுடனான கொரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாநகராட்சி தொங்கு பூங்கா பல்நோக்கு அரங்கில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அப்போது  அவர் கூறியதாவது: சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள விடுதிகள், உணவகங்களில் கொரோனா தடுப்பு  வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். அனைத்து பணியாளர்களும்  கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். பணியாளர்களின் நலன் கருதி மாநகராட்சியின் சார்பில் 4 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.  

சூரமங்கலம் மண்டலத்தில் ஜாகீர் அம்மாபாளையம் மாநகராட்சி மேல் நிலை பள்ளி வளாகத்திலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் குமாரசாமிபட்டி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அம்மாபேட்டை மண்டலத்தில் மாநகராட்சி நடு நிலைப் பள்ளி தேர்வீதி, துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் சஞ்சீவராயன்பேட்டை, மாநகராட்சி நடு நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களை உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகளாக தரம் பிரித்து, திடக்கழிவுகளை சேகரிக்க வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.  மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக தயாரிக்கவும், உயிரி எரிவாயு அலகு அமைத்திடவும் தேவையான நடவடிக்கைகளை உணவக உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உதவி கமிஷனர்கள்சரவணன், மருத்துவ அலுவலர்ஜோசப், சுகாதார அலுவலர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : inspection ,Corona ,hostel ,camp hotel ,Commissioner ,Corporation ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...