×

விரிவாக்க பணிகளுக்கு இடையூறு சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் சேந்தமங்கலத்தில் அதிகாரிகள் அதிரடி

சேந்தமங்கலம், ஜன.6: சேந்தமங்கலம் அருகே, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஷ் முத்துகாபட்டி ஊராட்சியில் நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிலுள்ள சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை வசதி மேற்கொள்வும், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளும் போது, போக்குவரத்திற்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சேந்தமங்கலம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று, உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தலைமையில், உதவி பொறியாளர் குமரேசன் மேற்பார்வையில், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் 2 பொக்லைன் மூலம் சேந்தமங்கலம், ராசிபுரம் மெயின் ரோடு முத்துகாபட்டி பஸ் நிறுத்தத்தில் உள்ள கடைகள் , ஹோட்டல்கள், குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் முத்துகாபட்டியில் இருந்து பெரியசாமி கோவில் செல்லும் சாலை உள்ள குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிகளை சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.

Tags : Chentamangalam ,
× RELATED சேந்தமங்கலம் அருகே துணிகரம் அடகு கடை...