×

நாமகிரிப்பேட்டையில் ₹5 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

நாமகிரிப்பேட்டை, ஜன.6: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில், 160 மூட்டை மஞ்சள் ₹5 லட்சத்திற்கு விற்பனையானது. நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனைசங்கத்தில் வாரந்தோரும் செவ்வாய் கிழமை அன்று மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன் படி, நேற்று கூடிய மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்க வந்தனர். அதே போல் ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள் 110 மூட்டையும், உருளை மஞ்சள் 45 மூட்டை, பனங்காலி 5 மூட்டை என மொத்தம் 160 மூட்டை மஞ்சள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. விராலி ரக மஞ்சள் ₹7,239க்கும், குறைந்தபட்சம் ₹5,062க்கும், உருண்டை ரக மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்சம் 5,462க்கும், குறைந்தபட்சம் ₹4,642க்கும், பனங்காலி ரக மஞ்சள் அதிகப்பட்சம் ஒன்றுக்கு ₹7,012க்கும் குறைந்தபட்சம் ₹6,619க்கும் என மொத்தம் 160 மூட்டை மஞ்சள் ₹5 லட்சத்திற்கு விற்பனையானது.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம்...