×

திருச்செங்கோட்டில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, ஜன.6 :நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான மூர்த்தி விடுத்துள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று 6ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செங்கோடு சி.எச்.பி.காலனியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக  அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும்  தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 8ம் தேதி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில்  நடக்கும் மக்கள் கிராமசபைக்கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றியும், வளர்ச்சி பணிகள் குறித்தும்  ஆலோசனை நடக்கிறது. இவ்வாறு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் பரமத்தி வேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ. மூர்த்தி அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : DMK ,executive committee meeting ,Tiruchengode ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்