×

கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த ஆய்வுக் கூட்டம்20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


கிருஷ்ணகிரி, ஜன.6: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். இதில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் உள்ள 1,863 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களிடையே வாக்களிக்கும் முக்கியத்துவம், இளம் வாக்காளர்களிடையே சுதந்திரமாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். எந்தவொரு வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபட கூடாது என்பதற்காக மீண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சான்று அளிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சிறப்பு முகாம் நடைபெற்ற நாட்களில் வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.

Tags : review meeting ,Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்