×

ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் பலி: 27 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஸ்ரீநகரில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வெடித்தது. தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) குழு, போலீசாருடன் சேர்ந்து வெடிபொருட்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போலீசார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் ஆவர். காயமடைந்தவர்கள் இந்திய ராணுவத்தின் 92 பேஸ் மருத்துவமனை மற்றும் ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் (SKIMS)-க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

டெல்லி கார் வெடிப்பு தொடர்பான விசாரணை மற்றும் சோதனையின் போது ​​ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையின் கூட்டுக் குழு சுமார் 3,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை மீட்டது. அந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஆய்வு செய்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

Tags : Jammu and Kashmir Police Station ,Srinagar ,Jammu ,Kashmir ,Forensic Science Laboratory ,FSL ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில்...