×

முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தை பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.6: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு விநியோகத் தொடர் வேளாண்மைத் திட்டத்தின் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் சிப்பம் கட்டும் அறை, குளிர்பதனக் கிடங்கு மற்றும் புளிக்கான முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள், எடை மேடை, கடை, அலுவலகம் மற்றும் மின் இணைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விபரங்கள் www.tenders.tn.gov.in, www.tn.gov.in, www.tnagrisnet.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் வரும் 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : companies ,
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...