தர்மபுரி அருகே ₹4லட்சம் மதிப்பில் தரைபாலம் பணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தர்மபுரி, ஜன.6: தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் ₹4லட்சம் மதிப்பீட்டில் தரைபாலம் மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியல், நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர் மாங்கனி செல்வராஜ், தொண்டரணி கவுதம், ஒப்பந்ததாரர் காவேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, செந்தில்நகர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தரமற்ற பொருட்களை வழங்குவதை மாற்றி,  உடனடியாக நல்ல பொருட்களை வழங்குமாறு ரேஷன்கடை ஊழியரிடம் அறிவுறுத்தினார்.

Related Stories:

>