விருதுநகர், ஜன. 6: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில், மேற்கு மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் மாயகண்ணன், சட்டமன்ற தொகுதி தலைவர் உதயகுமார் முன்னிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ‘ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பினை கூட்டுறவு அதிகாரிகள் வழங்காமல் அதிமுகவினர் மூலம் வழங்குவதை கண்டித்தும், துணை போகும் கூட்டுறவு அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.