×

போதிய விலை இல்லாததால் செடியிலே பறிக்காமல் விடப்படும் தக்காளி விவசாயிகள் கவலை

வருசநாடு, ஜன. 6: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிக்கு சந்தைகளில் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் செடியிலே பறிக்காமல் விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், வருசநாடு, தும்மக்குண்டு, புள்ளிமான்கோம்பை, மூனாண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யும் தக்காளிகளை தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் ஆகிய சந்தைகளுக்கு அனுப்புகின்றனர்.

அங்கு கிலோ ரூ.10க்கு விற்பனையாவதால், விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தக்காளியை பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியவில்லை என்கின்றனர். மேலும், தொடர் மழையால் செடிகளில் தக்காளிகள் அழுகி வருகின்றன. போதிய விலையும் இல்லை, மழையால் அழுகலும் ஏற்பட்டு வருவதால் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : plant ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...