×

கேரளாவில் இருந்து லாரியில் தேவாரம் வந்த ரூ.2 லட்சம் ஏலக்காய் மாயம்

தேவாரம், ஜன. 6: கேரளாவிலிருந்து தேவாரத்திற்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள 3 மூட்டை ஏலக்காய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள 8ம் மைல் பகுதியில் இருந்து லாரியில் 204 ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, தேவாரத்தில் உள்ள ஏலக்காய் கமிஷன் கடைக்கு, கூடலூர் எருமைக்காரன் தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) என்பவர் ஓட்டி வந்தார். இடையில், லாரியை கம்பத்தில் நிறுத்திவிட்டு, அவர் டீ சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், தேவாரத்தில் கமிஷன் கடையில் லாரியை நிறுத்தி, ஏலக்காய் மூட்டைகளை இறக்கியபோது, ரூ.2 லட்சம் மதிப்புள்ள தலா 25 கிலோ எடையுள்ள 3 ஏலக்காய் மூட்டைகள் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சினிமா பாணியில் லாரி மீது மர்ம ஆசாமிகள் மேலே ஏறி ஏலக்காய் முட்டைகளை திருடி சென்றனரா? அல்லது வேறு முறையில் ஏலக்காய் மூட்டைகள் திருடப்பட்டதா...? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thevaram ,Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...