தேனி அருகே பள்ளிக்குள் புகுந்த சாரைப் பாம்புகள்

தேனி, ஜன. 6: தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. இதற்காக ஆசிரியர், ஆசிரியைகள் தினசரி பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

நேற்று பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஆன்லைன் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது பள்ளிக்குள் உள்ள ஒரு வகுப்பறையின் அருகே இரண்டு சாரைப் பாம்புகள் இருந்தன.

இதனைக் கண்ட ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்து, பாம்பு பிடிக்கும் தேனி-பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த வாலிபர் கண்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த கண்ணன் சுமார் 9 அடி நீளமுள்ள சாரை பாம்பையும், 7 அடி நீளமுள்ள மற்றொரு சாரை பாம்பையும் லாவகமாக பிடித்தார்.

பிடிபட்ட பாம்புகளை தேனி அல்லிநகரம் அடுத்துள்ள வீரப்ப அய்யனார் கோயில் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>