தேனி பழனிசெட்டிபட்டி அல்மைட் அகாடமியில் நீட் வகுப்பு தொடக்கம்

தேனி, ஜன. 6: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள அல்மைட் அகாடமியில்  நீட் வகுப்புக்கள் தொடங்கின. பயிற்சி வகுப்புகள் துவக்க விழாவிற்கு பயிற்சி மையத்தலைவர்  ராஜகுமாரன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஸ்வரி அழகணன், பொருளாளர் வக்கீல். சந்தானகிருஷ்ணன், துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், ‘தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, போடி சிஸம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் வேதா ஆகியோர் கலந்துகொண்டு நீட் வகுப்புகளை துவக்கி வைத்தனர். துவக்க விழா நிகழ்ச்சியில், அல்மைட் அகாடமியின் நிர்வாக பொறுப்பாளர் ஓய்வுபெற்ற உயர்கல்வித்துறை இணை இயக்குனர்  கூடலிங்கம், ஓய்வுபெற்ற தாட்கோ பொதுமேலாளர் மாரிச்சாமி மற்றும் உறுப்பினர்கள் கருப்பையா, சீனிவாசன், அரவிந்த் பிரசாத் ஆறுமுகம், அருள்ராஜா, சந்திரமோகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>