டிராபிக் ராமசாமி ஆர்ப்பாட்டம்

இளையான்குடி, ஜன.6: இளையான்குடி அருகே அளவிடங்கானில், உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனர் வீரக்குமார் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விசவனூர் வருவாய் கிராமத்தில் 2019-20 ஆண்டிற்குறிய இன்சூரன்ஸ் தொகையை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பாண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொன்டனர்.

Related Stories:

>