×

கனமழையால் தண்ணீரில் மிதக்கும் வீடுகள் பக்கத்து வீடுகளில் மக்கள் தஞ்சம்

காளையார்கோவில், ஜன.6: கிருஷ்ணாநகர் கிழக்கு பட்டரண்கண்மாய் பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அக்கம் பக்கத்து வீடுகளில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். காளையார்கோயில் ஒன்றியம் காளக்கண்மாய் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணா நகர் கிழக்கு பட்டரங்கண்மாய் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றார்கள். தற்போது பெய்து வந்த கன மழைக்கு வீடுகளைச் சுற்றி இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரமுடியாத நிலையில் கடந்த 10 நாட்களாக சிரமம் அடைந்து வருகின்றார்கள்.

மேலும் வீட்டிற்குள் விஷ பூச்சிகள் படையெடுக்க தொடங்கி விட்டன. இதனால் உயிர் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் அக்கம் பக்கத்தினர் வீட்டில் வசித்து வருகின்றார்கள். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியபோது, அவர் அருகில் உள்ள பழைய மடையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார்.

புதிதாக கட்டிய மடை மேடாக உள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிலையில் உள்ளது. மடையை கட்டுவதற்கு முன்பு இதுபோன்று கனமழைக்கு தண்ணீர் தேங்க வில்லை என்றும் இந்நிலை நீடித்தால் கட்டிடங்கள் பழுது அடைந்து பலத்த சேதம் ஏற்படும் என்று கூறினார்கள்.
எனவே ஊராட்சி நிர்வாகம் எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்