×

மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் மரக்கன்று நாற்றங்கால் பண்ணை

சிவகங்கை, ஜன.6: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாற்றங்கால் பண்ணை அமைத்து மர நாற்றுகள் வளர்க்கப்பட உள்ளது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்: மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் 2ஆயிரத்து 723 குக்கிராமங்கள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு நாற்றங்கால் பண்ணை மற்றும் பாகனேரி ஊராட்சியில் உள்ள ஒரு நாற்றங்கால் பண்ணை என மொத்தமுள்ள 13 நாற்றங்கால் பண்ணைகளில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் இலுப்பை, வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, புங்கை, புளி, கொன்றை மற்றும் நொச்சி உள்ளிட்ட மரக்கன்றுகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 432கிராம ஊராட்சிகளிலும் தலா ஒரு நாற்றங்கால் பண் ணை, ஒவ்வொன்றும் ரூ.1லட்சம் மதிப்பீட்டில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாற்றங்கால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படவுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் 2ஆயிரத்து 723கிராமங்களிலும் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளாக வளர்க்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, இம்மாவட்டத்தில் உள்ள 13நாற்றங்கால் பண்ணைகளில் தற்போது இருப்பில் உள்ள 30ஆயிரம் மரக்கன்றுகள் ஊராட்சி மன்ற கட்டடங்கள், பள்ளி வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள், வட்டார வள மையங்கள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்களில் நடவு செய்யப்படவுள்ளது.எஞ்சியவை தொட ர்ந்து நடவு செய்யப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : nursery farm ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்