போதை பழக்கத்துக்கு அடிமையானோர் மறுவாழ்வு பெற புதிய சிகிச்சை மையம் கீழக்கரை மக்கள் வலியுறுத்தல்

கீழக்கரை, ஜன.6:  கீழக்கரையில் இளைஞர்கள் சிலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரையும் வேதனையில் ஆழ்த்துகின்றனர். இந்நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் மது மற்றும் இதர போதை பழக்கத்துக்கு, மறுவாழ்வு பெற, புதிய சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென கீழக்கரை மாசா சமூக நல அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதைக்கு அடிமையானவர்கள் மீட்டு சிகிச்சை அளிக்க ராமநாதபுரம் மற்றும் மதுரைக்கு அழைத்து செல்லும் சூழலே உள்ளது. இதனால் பாதிக்கப்படும் எளிய நபர்கள் இச்சிகிச்சையை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கீழக்கரை அரசு மருத்துவமனையில் போதை மறு வாழ்வும் மையம் ஏற்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும்.

இப்புதிய சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால், மதுவுக்கு அடிமையானோருக்கு, 21 நாட்கள் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், சிறப்பு சிகிச்சை மையத்துக்கு மனநல சிறப்பு டாக்டர், மனநல ஆலோசகர், மூன்று செவிலியர், ஆண் ரண சிகிச்சையாளர் ஆகியோர் பணி அமர்த்தப்படுவர். தவிர சுகாதாரமான உணவு, யோகா, தியான பயிற்சி, விளையாட்டு உட்பட மனமாற்றத்திற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தலாம். இவை அனைத்தும் இப்பகுதியில் அமைவதன் மூலம் மது போதையில்லா சமூகத்தை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>