டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆசிரியர்கள் ஆதரவு

சாயல்குடி, ஜன.6:  டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு தெரிவித்து தீர்மானம் இயற்றினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி ராமநாதபுரம் அரண்மனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும். மேலும் டெல்லியில் கடும் குளிரிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, கிராமபுற பள்ளிகளில் பாதுகாப்பு, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் அருள் நன்றி கூறினார்.

Related Stories:

>