வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் ஜன.6: திண்டுக்கல் வேடபட்டி ஞானநந்தகிரி நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(32). இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கொரோனாவால் திண்டுக்கல்லுக்கு  வந்தவர் விவசாயத்தை கவனித்து வந்தார். இவர் கடந்த மாதம் டூவீலரில் செல்லும் போது வாகன விபத்து ஏற்பட்டு காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதில் மனவிரக்தி அடைந்து காணப்பட்ட அவர் நேற்று  காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>