போதையில் தாயை அடித்து கொன்ற மகன்

திண்டுக்கல், ஜன.6: திண்டுக்கல்லில் மது போதையில் மகனே பெற்ற தாயை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள்(71). இவரது மகன் ரத்தினவேல்(47). இவர் அதே ஊரில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

தாய்க்கும் மகனுக்கும் இடையே பல வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது தாய் முத்தமாளை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இதில் மயக்கமடைந்த முத்தம்மாளை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ெசல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர்.

Related Stories:

>