மன்னவனூரில் கைப்பந்து மைதானம்

கொடைக்கானல், ஜன.6: கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் பகுதியில் பழநி தொகுதி திமுக எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் நிதி உதவியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடங்கியது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் முத்துமாரி தலைமை தாங்கி பணிகளை துவங்கி வைத்தார். மாவட்ட பிரதிநிதி சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மைதானம் அமைக்கும் பணியை விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: