திற்பரப்பு லாட்ஜில் கணவருடன் சுற்றுலா வந்த பெண்ணுக்கு தொல்லை

நாகர்கோவில், ஜன. 6:திற்பரப்புக்கு கணவருடன் சுற்றுலா வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காலகட்டத்தில் சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலாதலங்கள் வெறிச்சோடி கிடைந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பயணிகள் வருகையால் உயிர்பெற்று வருகிறது. இதுபோல் திற்பரப்பு அருவிக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வரதொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், கணவருடன் திற்பரப்புக்கு சுற்றுலா வந்தார். கணவன், மனைவி இருவரும் திற்பரப்பு அருவியில் குளித்துவிட்டு திற்பரப்பில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். அங்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜிஜி மோன்(32) என்ற வாலிபரும் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கணவருடன் தங்கியிருந்த பெண்ணின் அறை கதவை ஜிஜி மோன் தட்டியுள்ளார். கதவை பெண் திறந்துள்ளார். அப்போது ஜிஜி மோன் அந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆத்திரம் அடைந்த பெண் சத்தம்போடவே, ஜிஜி மோன் பெண்ணை தகாதவார்த்தையால் திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், குலசேகரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் குலசேகரம் சப்இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜிஜி மோனை கைது செய்தார். இந்த சம்பவத்தால் திற்பரப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>