×

பீகார் சட்டமன்றத் தேர்தல்: பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. 2 கட்டங்களாக நடந்த தேர்தலில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பீகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. பீகார் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதை தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் தற்போதையை நிலவரப்படி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை. ஆனால் ஜேடியூ + பாஜக கூட்டணி 129 இடங்களிலும், ஆர்ஜேடி + காங். கூட்டணி 93 இடங்களிலும் ஜன் சுராஜ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags : Bihar Assembly Election ,NDA ,Bihar Assembly ,Bihar Legislature ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு...