×

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் சரிபார்க்கும் விவிபேட் இயந்திரம் முதல்நிலை சரிபார்ப்பு

திருப்பூர், ஜன. 6:  சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் சரிபார்க்கும் விவிபேட் இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து நேற்று ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே இருப்பு உள்ளவை மற்றும் வேலூர் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 5,798 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,445 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4,800 விவிபேட் இயந்திரங்கள் அடங்கும். இந்நிலையில், வாக்காளர் சரிபார்க்கும் விவிபேட் இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் வைத்தார். பின்னர், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நல்லூர் மண்டல அலுவலகத்தில், ஊரக வளர்ச்சிப்பிரிவிலிருந்து பெறப்பட்டு 2006 ஆம் ஆண்டிற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்ட எம்-1 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையையும் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது, வட்டாட்சியர்கள் தெற்கு சுந்தரம், பல்லடம் தேவராஜ், ரவீந்தீரன்(தேர்தல்)உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : elections ,Assembly ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா,...