வாடகை செலுத்தாத 2 கடைக்கு பூட்டு

கோவை, ஜன. 6: கோவை மேற்கு மண்டலம் ஆரோக்கியசாமி சாலையில் செயல்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் நிலையம் மற்றும் தடாகம் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த உடற்பயிற்சி கூடம் ஆகிய 2 கடைகளும் 6 மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் இந்த 2 கடைகளையும் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,`சம்பந்தப்பட்ட  2 கடைகளும் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த நிலையில் அவர்கள் மாநகராட்சியில் வைப்புத் தொகையாகச் செலுத்தியிருந்த தொகையில் இருந்து வாடகை கழிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, வைப்புத் தொகை முழுவதும்  கழிக்கப்பட்ட நிலையில், தற்போது, இக்கடைகளைப் பூட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>