×

அறிவை விட ஞானமே சிறந்தது எழுத்தாளர் கிருஷ்ணா பேச்சு

கோவை, ஜன.  6:  கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரா 2021’ நிகழ்ச்சியின் 5ம் நாள் விழா ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலை பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர் கிருஷ்ணா கலந்து கொண்டு  மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி பேசியதாவது: மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் கருவிலேயே ஞானம் அடைந்தவர். சிறு வயதிலேயே இவருக்கு இருந்த ஞானத்தை கண்டு அனைவரும் வியந்தனர்.

தன் தாய், தந்தையருக்கு பிறந்த பலனான மோட்சத்தை தந்து அருளினார். சென்ற இடமெல்லாம் லீலைகள் புரிந்தார். இவரால் பலர் ஞானம் அடைந்துள்ளனர். பரம்பொருளே செம்பொருளே என இறைவனை நினைத்து  இறைநிலை அடைந்தார். இவரை போன்ற ஞானிகள், அறிவை விட ஞானமே சிறந்தது என்று கூறுகின்றனர். ஞானிகள் முன் நம் அகந்தைகள், அகங்காரம், கோவம், காமம் போன்ற தீயவைகள் அழியும். ஞானிகளை சந்திப்பது, மந்திரங்களை உச்சரிப்பது, முத்திரைகளை பயன்படுத்துவது  மூலம்  நமக்கு  ஞானம் கிடைக்கும்.

நமக்கு துன்பங்கள் வரும் பொழுதுதான் ஞானமுடைய விவேகம் வரும். நாம் வெளியுலகத்தில் கவனம் செலுத்துவதை காட்டிலும் நம் ஆழ்மனதில் கவனம் செலுத்தினால் நமக்கு யோகா ரகசியமான பேரறிவு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Krishna ,
× RELATED சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு