கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு,  ஜன. 6: ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் மேட்டுக்காட்டு தோட்டம் பகுதியை  சேர்ந்த முத்துசாமி மனைவி கலைவாணி (36). இவரது மகள் ரேணுகாதேவி (19).  ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து  வந்தார். கலைவாணி அவரது கணவர் முத்துசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக விவாகரத்து பெற்று, அவரது மகளுடன் வசித்து வந்தார்.

ரேணுகாதேவி  நேற்று முன்தினம் காலை ஆன்லைன் வகுப்பிற்காக செல்போனுடன் அவர்களுக்கு  சொந்தமான ஓலை குடிசைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் ரேணுகாதேவி  வராததால், கலைவாணி சென்று பார்த்தபோது, ரேணுகாதேவி தூக்குபோட்டு தற்கொலை  செய்து கொண்டது தெரியவந்தது. ரேணுகாதேவி தற்கொலை செய்து கொண்டதற்கான  காரணம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>