ரயில்வே ஸ்டேஷன் பொலிவுப்படுத்தும் பணி தீவிரம்

ஈரோடு, ஜன. 6: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பொலிவுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஜான் தாமஸ், அடுத்த மாதம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொள்ள வர உள்ளார். இதற்காக ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை பொலிவுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலின் முகப்பு பகுதி முன்பதிவு மற்றும் பொது ஜன பெட்டி டிக்கெட் கவுன்டர்கள் பொலிவுப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிளாட்பார்ம்களில் உள்ள கட்டிடங்களில், பெயர்ந்த தரைத்தளங்கள் சீரமைக்கும் பணிகளும், பயணிகள் காத்திருப்பு அறை தயார்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories:

>